தேசிய செய்திகள்
1. தமிழகத்தில் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
2. சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் ஏவி சாதனைகளைப் படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அடுத்ததாக, இந்திய ராணுவ கண்காணிப்புக்கு உதவக்கூடிய ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
3. சுருக்குமடி வலை பயன்பாட்டை கட்டுப்படுத்தி மீன்வளத்தை பாதுகாத்த கடலூர் மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் ரம்யா லட்சுமிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்குக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது அளிக்கப்பட்டது.
4. இஸ்ரோவுக்கான ராக்கெட்டுகளை வடிவமைத்தல், பி.எஸ்.எல்.வி., திட்டத்தில் இணைந்து பணியாற்றியது, ஜி.எஸ்.எல்.வி., திட்டத்தில் பங்கெடுத்து ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சிவன்,
வர்த்தக செய்திகள்
5. டென்மார்க்கின் மூன்றாவது பெரிய வங்கியான ஜிஸ்கே வங்கி (Jyske Bank) உலகின் முதல் எதிர்மறை வட்டி வீத அடமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடன் வாங்குபவர்களுக்கு 10 ஆண்டு ஒப்பந்தத்தை -0.5மூ க்கு வழங்கத் தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
6. எஸ்டோனியாவின் தாலினில் நடைபெற்ற ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபக் புனியா தங்கப்பதக்கம் வென்றார். அவர் ரஷ்யாவின் அலிக் ஷெப்சுகோவை தோற்கடித்து 86 கிலோ ஜுனியர் ஃப்ரீஸ்டைல் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம், 18 ஆண்டுகளில் ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியரானார்.
7. 10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.