உலக செய்திகள்
1. ஆராய்ச்சி நோக்கங்களுக்காக திமிங்கலங்ளை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்ட சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜுலை 1 அன்று வணிக நோக்கிலான திமிங்கல வேட்டையை ஜப்பான் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியது. சர்வதேச திமிங்கல ஆணையத்திலிருந்து (International Whaling Commissionn) ஜப்பான் விலகியபின் இந்த வேட்டைகள் நடத்தப்படுகின்றன.
2. துபாய் டூட்டி ஃப்ரீ. இப்போது துபாய் விமான நிலையத்தின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
3. UAE, உலகின் மிகப்பெரிய ஒற்றை சூரிய ஆலையான நூர் அபுதாபியை அறிமுகப்படுத்தியது, இது கிட்டத்தட்ட 1,177 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது.
4. சூரியனை படம் பிடிக்கும் PUNCH திட்டத்தை தலைமையேற்று வழி நடத்துவதற்காக டெக்சாஸைச் சேர்ந்த தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தை NASA தேர்வு செய்துள்ளது. இது சூரியனின் வெளிப்புற ஒளிவட்டத்தை படம் பிடிக்கும் ஒரு முக்கியப் பணியாகும்.
தேசிய செய்திகள்
5. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) தனது முதல் “ஆதார் சேவா மையத்தை”(“Aadhaar Seva Kendra”-ASK) டெல்லி மற்றும் விஜயவாடாவில் பைலட் அடிப்படையில் செயல்படுத்தியுள்ளது.
6. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) “இந்தியா: தேசத்தின் மாநிலங்களின் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் தொற்று இல்லாத நோய்கள் (non-communicable diseases NCD) குறித்த அறிக்கையை வெளியிட்டது.
வர்த்தக செய்திகள்
7. பொருளாதார ஆய்வறிக்கை 2018-19: பொது அரசு (மத்திய மற்றும் மாநில அரசுகள்) நிதி ஒருங்கிணைப்பில் செயலாற்றுகிறது. பொருளாதாரம் 2018-19ல் 6.8 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்ப்பு.