உலக செய்திகள்
1. நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அங்கீகாரத்தை இந்தியாவிற்கு வழங்கியது அமெரிக்கா. 2020-ம் நிதியாண்டிற்கான தேசிய பாதுகாப்பு அதிகாரமளிப்புச் சட்டம் அமெரிக்க செனட்டால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது
தேசிய செய்திகள்
2. சென்னையில் ஜுலை 13ம் தேதி லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெறவுள்ளது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரையின் படி தமிழகத்தில் லோக் அதாலத் நடைபெற உள்ளது.
3. இந்தியாவில் 3 புதிய தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் (NNIMZ – National Investment & Manufacturing Zone) அமைப்பதற்கு மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
4. வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக முதல் அமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட உயர்நிலைக் குழுவை இந்திய பிரதமர் அமைத்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
5. 27 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி
முக்கிய தினங்கள்
6. ஜுலை 4 - அமெரிக்காவின் சுதந்திர தினம்
7. ஜீலை 1 முதல் 7 வரை - தேசிய வன மகோத்சவ் வாரம்