உலக செய்திகள்
1. சமீபத்திய QS உலக பல்கலைக்கழக தரவரிசைகளின் பட்டியலில் அமெரிக்காவில் உள்ள மாசாசு செட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பநிறுவனம் முதலிடத்தில் உள்ளது
2. நியமிக்கப்பட்ட பெயர்கள் & எண்களுக்கான உலகளாவிய இணைய அமைப்பும் (ICANN) இந்திய தகவல் தொழிநுட்பத்துறை அமைப்பான நாஸ்காமும் இணைந்து, இணையத்தைப் பயன்படுத்தி சாதனங்கள் மற்றும் உட்கட்டமைப்பை நிர்வகிக்கப் பயன்படும் அடையாளங்காட்டி தொழிநுட்பத்தை(Identifier Technology) உருவாக்கவுள்ளன.
3. கனடாவின் மாண்ட்ரியலில் உள்ளபன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு(ICAO) கவுன்சிலில், இந்தியாவின் பிரதிநிதியாக 1992 ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த இந்திய வருவாய் சேவை(வருமானவரிபணிநிலை) அதிகாரி ஷெபாலி ஜூனேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
4. ப்ளும்பெர்க் NEF (BloombergNEF) வெளியிட்டுள்ள புதிய எரிசக்தி அவுட்லுக் அறிக்கை 2019 New Energy Outlook (NEO) report 2019 உலகெங்கிலும் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் காற்று மற்றும் சூரியசக்தி புதிய சக்தியாகும்,மேலும் அவை 2050 க்குள் மின்சார அமைப்பில் கிட்டத்தட்ட பாதியை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்திகள்
5. 17- வதுமக்களவையின் சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6. பள்ளிகல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாக “சமக்ராசிக்ஷா”‘SamagraShiksha’ என்னும் திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் பள்ளிகல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் தொடங்கப்பட்டது.