நடப்பு நிகழ்வுகள் ஜூன் 24, 2019






உலக செய்திகள் 

1. ஆப்கன் அமைதி மாநாடு பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் தொடங்கியது. இம்மாநாட்டின் நோக்கம் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதாகும் .

தேசிய செய்திகள் 

2. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பெண்களுக்கு 53% இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு துறை தகவல் தெரிவித்துள்ளது.

3. இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு இ-அடங்கல் வழங்கும் திட்டம் ஜுலை முதல் அமலுக்கு வருகிறது.

4. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை கோவா மாநில அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

5. பிரதமரின் விவசாய உதவித்தொகைத் திட்டத்தில் 14.50 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

6. ஹிமாசலப் பிரதேச உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

7. உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இந்திய வீரர் மொகமது ஷமி சாதனை புரிந்தார். உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2–வது இந்தியர் ஆவர். முதல் வீரர் சேட்டன் சர்மா ஆவர்.

முக்கிய தினங்கள் 

8. ஜுன் 23–ஐ.நா பொதுச் சேவை தினம். இதன் நோக்கம் – பொதுச்சேவையை ஊக்குவிக்கவும் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்க ஐ.நா பொதுச்சபை கடைபிடிக்கிறது. இதற்கான தலைப்பு – “சேவைகள், புதுமையான மாற்றம் மற்றும் பொறுப்புணர்வு நிறுவனங்கள் வழங்குவதன் மூலம் நிலையான அபிவிருத்தி”


Previous Post Next Post