உலக செய்திகள்
1. கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் (Kimberley Process Certification Scheme- KPCS) நிறுவன உறுப்பினர்களுள் ஒன்றான இந்தியா, கிம்பர்லி செயல்முறையின் 2019 ஆம் ஆண்டுக்கான தலைவராக உள்ளது.
2. மெல்போர்னின் (IFFM- 2019) 10 ஆவது இந்திய திரைப்பட விழாவில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
தேசிய செய்திகள்
3. கீல்வாதம், மூட்டு வலி மற்றும் கால் வியாதிகளால் பாதிக்கப்பட்ட யானைகளுக்கு இந்தியா தனது முதல் சிறப்பு நீர் சிகிச்சை மையத்தை உத்திரபிரதேசத்தின் மதுராவில் திறந்துள்ளது.
4. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை, வயதான பெற்றோரைக் கைவிட்டு விடும் மகன் மற்றும் மகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
5. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் Dr. K சிவன் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனக்கென சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கும் என அறிவித்துள்ளார்.
6. ஒரு பயனரின் (User) தனியுரிமையை (privacy) மீறும் வாட்ஸ்ஆப் பிழையைக் கண்டுபிடித்ததற்காக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் சோனல் சௌகைஜாம் (22), பேஸ்புக்கால் ‘‘Facebook Hall of Fame" என்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
7. ஜீன் 21 - சர்வதேச யோகா தினம். சர்வதேச யோகா தினம் 2019 க்கு இரண்டு கருப்பொருள்கள் உள்ளன ஐக்கிய நாடுகள் கருப்பொருளை “காலநிலை நடவடிக்கைக்கான யோகா” என்றும், ஆயுஷ் அமைச்சகம், யோகா தினத்திற்கான கருப்பொருளை “இதயத்திற்கான யோகா” என்றும் அறிவித்துள்ளது.
8. ஜீன் 21 - சர்வதேச இசை தினம். 2019 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் “சந்துப்புகளில் இசை” (music at intersections).