நடப்பு நிகழ்வுகள் ஜூலை 20, 2019






தேசிய செய்திகள் 

1. தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகியவற்றை தமிழகத்தின் புதிய மாவட்டங்களாக அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி. 34 வது மாவட்டமாக தென்காசியும் 35 வது மாவட்டமாக செங்கல்பட்டும் உள்ளது. தென்காசி மாவட்டம் திருநெல்வேலியில் இருந்தும் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் இருந்தும் பிரிக்கப்பட்டுள்ளது.

2. தமிழக சட்டபேரவையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார். இதுவரை மொத்தம் 12 தலைவர்களின் உருவப்படம் பேரவையில் வைக்கப்பட்டுள்ளது.

3. பாபர் மசூதி நில விவகாரத்தில் மத்தியஸ்தர் குழுவின் நடவடிக்கை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

4. சந்திராயன் – 2 விண்கலத்தை ஜீலை 22ல் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

5. ஏர் இந்தியா பங்கு விற்பனையின் அமைச்சரவைக் குழு தலைவராக அமித் ஷா நியமனம்

விளையாட்டு செய்திகள் 

6. ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற ஜீனியர் உலககோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.



Previous Post Next Post