உலக செய்திகள்
1. இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய செய்திகள்
2. வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய “அம்மா இயற்கை நலப் பெட்டகம்” இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
3. சர்வதேச இளைஞர் திறன் வளர்ச்சி தினத்தை முன்னிட்டு இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் திறன் மேம்பாடு குறித்து அவர்களின் கருத்துக்களை பெறுவதற்கும் மத்திய அரசு “கவுசல் யுவா சாம்வாட்” (Kaushal Yuva Samwaad”) – ஐ டெல்லியில் அறிமுகம் செய்துள்ளது.
4. பாலின மாற்று அறுவை செய்துகொள்பவர்களுக்கு பீகார் அரசு 1.5 லட்சம் ரூபாய் நிதியளிக்கப்படும் என்று பீகார் அரசு தெரிவித்துள்ளது. மேலும் கின்னர் கல்யாண்(Kinnar Kalyan) என்ற மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தையும் அமைக்கவுள்ளது.
5. சர்வதேச கல்வி மையமாக இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இந்தியாவில் பயில்வோம் என்ற திட்டத்தின் கீழ் யோகாவையும் சேர்க்க உள்ளது.
6. மக்களவையானது 2019 ஆம் ஆண்டின் தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA – National Investigation Agency) திருத்த மசோதாவை மாற்றியமைத்துள்ளது.
வர்த்தக செய்திகள்
7. ஆர் பி ஐ உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று பிமல் ஜலான் குழு பரிந்துரை செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
8. ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற ஜுனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 25மீ ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்.
9. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
10. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோமானியாவை சேர்ந்த சிமோனா ஹல்ப் அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
முக்கிய தினங்கள்
11. ஜுலை 18 – நெல்சன் மண்டேலா தினம்.