நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2, 2019







உலக செய்திகள் 

1. ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 74-வது இடத்தில் உள்ளது. இதில் முதலிடத்தில் பிரிட்டன் உள்ளது.

தேசிய செய்திகள் 

2. தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்” வகையை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

3. சரக்கு மற்றும் சேவை வரியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா ஜூலை 1, 2019 அன்று கொண்டாடப்படுகிறது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் அணுராக் தாக்கூர் விழாவிற்கு தலைமையேற்கவுள்ளார்.

4. நாடு முழுவதும் 316 பாதுகாக்கப்பட்ட  இடங்களில் சுரங்கங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது  என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5. இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் புதிய தலைவராக திரு. சரத்குமார் ஷராஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

6. இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநராக கே. நடராஜன் பொறுப்பேற்றுள்ளார். இவர் இந்திய கடலோரக் காவல்படையின் 23-வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

7. சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் சோட் ரானி.

முக்கிய தினங்கள் 

8. ஜூலை 1 – சர்வதேச நகைச்சுவை தினம்.

9. ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்.



Previous Post Next Post