நடப்பு நிகழ்வுகள் ஜூன் 9, 2019






தேசிய செய்திகள் 

1. இந்தியாவில் முதல் முறையாக டெல்லி மெட்ரோ இரயிலில் கழிவுப் பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

2. ராஜூவ் குமார் மீண்டும் நிதி ஆயோக்கின் (NITI Aayog) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. புது டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில், “ஹிமாச்சலிக் நாட்டுப்புற கலை அறியப்படாத தலைவர்கள்”(“Unknown Masterpieces of Himachal Folk Art”) கண்காட்சியை, கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், பிரஹலாத் சிங் படேல் தொடங்கி வைத்தார்.

4. போர்ட் வில்லியம்ஸ் என்பது சிலியின் நவரினோ தீவில் உள்ள பிரதான குடியேற்றம், துறைமுகம் மற்றும் கடற்படைத் தளமாகும். அண்மையில், சிலி நாட்டு அதிகாரிகள் போர்ட் வில்லியம்ஸ் நகரை குக்கிராமம் என்னும் நிலையிலிருந்து நகரம் என்னும் நிலைக்கு உயர்த்திய பின், அது உலகின் தென்கோடி நகரமாக மாறியது.

வர்த்தக செய்திகள் 

5. இந்திய ரிசர்வ் வங்கி, ஜூன் 3 முதல் 7 வரை நாடு முழுவதும் நடப்பாண்டு நிதியியல் கல்வி வாரத்தை கடைப்பிடிக்கவுள்ளது. “Farmers and How they Benefit by being a Part of The Formal Banking System – விவசாயிகள் மற்றும் முiயான வங்கியியல் அமைப்பின் கீழ் விவசாயிகள் பெறும் நன்மை” என்பது நடப்பாண்டில் வரும் இவ்வாரத்துக்கான கருப்பொருளாகும்.

முக்கிய தினங்கள் 

6. ஜூன் 7-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக உணவு பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டின் கருத்துரு : ‘உணவு பாதுகாப்பு, எல்லோருடைய பணியாகும்’.




Previous Post Next Post