நடப்பு நிகழ்வுகள் ஜூன் 8, 2019






தேசிய செய்திகள்

1. புதுடெல்லியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி அவர்களது தலைமையிலான மத்திய அரசு “மிஷன்- 2022” என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் 1000 நாட்களில் வீடு, சாலைவசதி, குடிநீர் வசதிகள் போன்ற 75 முக்கிய அம்சங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகும்.

2. ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா இரயில் சேவை ரஷ்யாவின் ஆர்டிக் பகுதிக்கு தொடங்கியது. இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது.இந்த இரயிலின் பெயர் “சாரன் கோல்டு (zarengold))” என்பதாகும்.

3. சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உலக சுற்றுச் சூழல் தினத்திற்காக #Selfiewtsapling என்னும் ஒரு மக்கள் பிரச்சாரத்தை தொடங்கினார்.

4. இந்தியாவில் ஒடிசாவில் சாந்திபூரில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

5. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA)- இன் 74 வது அமர்வின் தலைவராக நைஜீரியாவின் ஐ.நா தூதுவர்டிஜானி முஹம்மது- பந்தே (Tijjani Muhammad- Bande) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வர்த்தக செய்திகள் 

6. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், ‘ரெப்போ’ என்ற குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கிகளுக்கான வட்டி விகிதமும், 0.50 சதவீதம் குறைக்கப்பட்டடுள்ளது. இணையதள பணப் பரிவர்த்தனை கட்டணங்களையும், ஆர்.பிஐ., ரத்து செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள் 

7. அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்தை வெற்றி பெற்றதன் மூலம் இந்திய ஜீனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் ஃபிட்ஸ்ஜெரால்ட் ரு21 U21 (Cantor Fitzgerald U21)சர்வதேச பட்டத்தை வென்றது.




Previous Post Next Post