நடப்பு நிகழ்வுகள் ஜூன் 7, 2019





உலக செய்திகள் 

1. நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் ஜப்பானில் நடக்கவிருக்கும் ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் இரு நாள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

2. டிரம்ப் நிர்வாகம் அண்மையில் இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தை அதன் முதன்மை வர்த்தகப் பங்காளிகளின் நாணயக் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

தேசிய செய்திகள் 

3. கிராமப்புற பெண்களுக்கு டிஜிட்டல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு திட்டமான ‘டிஜிட்டல் சாகி’ “Digital Sakhi”-L&T நிதி சேவைகள் (LTFS) தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களில் தொடங்கியுள்ளது.

4. திருவாரூர் – காரைக்குடி தடத்தில் ஜுன் 1 முதல் 30 வரை DEMU சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

5. அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை மற்றும் நாஸ்டாக் ஜனாதிபதி அடேனா ஃப்ரிட்மன் (Adena Friedman) ஆகியோர், உலகின் முன்னணி தொழில்நுட்ப உந்துதல் தளங்களில் இரண்டு நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக USIBCயின் வணிக ஆலோசகர் குழு மூலம் 2019 ஆம் ஆண்டுக்காக உலகளாவிய தலைமைத்துவ விருதுக்கு (Global Leadership Awards 2019) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டு செய்திகள் 

6. 2019 இன் UEFA சாம்பியன்ஷிப்பை லிவர்பூல் வென்றுள்ளது. போட்டன்ஹாமை வீழ்த்தி லீவர்பூல் அணியானது 6-வது முறையாக ஐரோப்பாவின் சாம்பியனாக உருவெடுத்துள்ளது.



Previous Post Next Post