நடப்பு நிகழ்வுகள் ஜூன் 6, 2019









உலக செய்திகள் 

1. யூதப்படுகொலையின் நினைவாக 2020 அக்டோபரில் யூதப்பகைமைக்கு எதிரான ஒரு சர்வதேச மாநாட்டை சுவீடன் நடத்தவுள்ளது. மால்மோவில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, இரண்டு குறிப்பிடத்தக்க தேதிகளுடன் ஒத்திசைந்து வருகிறது.

தேசிய செய்திகள் 

2. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையானது மூன்றாம் பாலினத்தவருக்கான சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளுக்கென இயங்கும் ஒரு முழு நேர சிறப்புப் பிரிவைத் தொடங்கியுள்ளது.

3. பிரதமர் நரேந்திர மோடி தேசிய பாதுகாப்பு நிதியத்தின் கீழ் ‘பிரதம மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டம் பிரதான மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

4. முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டிலுக்கு வெளிநாட்டினருக்கான மெக்ஸிகோவின் உயர்ந்த குடிமகன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் மெக்ஸிகோ தூதர் மெல்பா பிரியா, “ஆர்டன் மெக்ஸிகானா டெல் அகுய்லா அஸ்டெகா” திருமதி பாட்டிலுக்கு வழங்கினார்.

5. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்தி காந்த தாஸிடம் தந்தன் நீலகனி கமிட்டி இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அதிகரிப்பதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளனர்.

முக்கிய தினங்கள் 

6. ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகின்றது.




Previous Post Next Post