தேசிய செய்திகள்
1. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. இங்கு “பாரம்பரிய மற்றும் கிரியோ பிரிசர்வேஷன்" ஆகிய இரு முறைகளில் பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க வேளாண் பல்கலைக்கழகம் பாதுகாத்து வருகிறது.
வர்த்தக செய்திகள்
2. சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சில் கூட்டம் ஜீன் 20ம் தேதி நடைபெறுகிறது. நிர்மலா சீதாராமன் தலைமை வகிப்பவர்.
3. தமிழக அரசு புதிய ஜவுளிக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இக்கொள்கையில் “பிராசசிங்” தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.இந்திய ஜவுளி துறையில் ஏற்றுமதியிலும், உள்நாட்டு தேவைகளையும் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிப்பது கோவை மண்டலமாகும்.
முக்கிய தினங்கள்
4. ஜீன் -10 ஆம்பியர் பிறந்த தினம். மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை விளக்கி மின்காந்தவியல் என்ற துறை உருவாக காரணமாக இருந்தவர்.