நடப்பு நிகழ்வுகள் ஜூன் 10, 2019






தேசிய செய்திகள் 

1. பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் விரிவுபடுத்த (பிஎம் – கிசான்) திட்டம் மூலம் 14.5 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2. இந்தியா – மாலத்தீவுகள் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நீர் நிலைகள், சுகாதாரம், கடல் சார்ந்த சரக்கு போக்குவரத்து, சுங்கத்துறை, குடிமைப்பணி பாதுகாப்பு என 6 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

3. மாலத்தீவுகளில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவ விருதான  “ரூல் ஆஃப் நிஷான் இஸீத்தீன்” பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

4. இந்தியாவுக்கு ஆளில்லா போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டு செய்திகள் 

5. பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்லி பர்டி சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர். பிரிட்டனின் ஜோஹன்னா கொண்டாவை வீழ்த்தினார்.




Previous Post Next Post