நடப்பு நிகழ்வுகள் மே 4, 2019








உலக செய்திகள் 

1. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் – இ- முகமதின் தலைவரான மசூத் அஷாரை உலகளாவிய பயங்கரவாதி என்று முடிவு செய்துள்ளனர்

2. பொய்யான செய்திகளை தடுக்க ரஷ்ய அரசு இறையாண்மை இணைய மசோதா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

தேசிய செய்திகள் 

3. இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ் கிரண் குமாருக்கு பிரான்ஸ் அரசு, அந்நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

4. இலங்கைகிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார்சங்கக்காரா,டேரிலெபோன் கிரிக்கெட் கிளப்பின் (MCC- Maxylebone Cricket Club) முதல் பிரிட்டிஷர் அல்லாத தலைவராகதேர்தெடுக்கப்பட்டுள்ளார்.


5. LIC வீட்டுவசதி நிதி (LIC HFL) பெங்களுரில் ஒரு திறன் மேம்பாட்டு மையமான ‘உதயம்’ –த்தை அறிமுகப்படுத்தியுள்ளது

6. அரசுக்கு சொந்தமான தொலை தொடர்பு நிறுவனமான BSNL புல்வாமாவில் ஆப்டிகல் ஃபைபர் சார்ந்த அதிவேக பிராட்பேண்ட் சேவையான “பாரத் ஃபைபர்” (Bharat Fibre)  முதன்முதலில் தொடங்கவுள்ளது

7. மங்களுரு போலீஸ் கமிஷனர் சந்தீபீபால் மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை கையாளுவதற்கான பெண்கள் மட்டுமே கொண்ட போலீஸ் ரோந்து பிரிவான “ராணி அபாக்கா படையை” துவக்கி வைத்தார்.

8. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750வது பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார்.

9. 1700 ஆண்டுகள் பழமையான பௌத்த சிற்பம் தெலுங்கானாவில் கண்டறியப்பட்டுள்ளது.

10. BHEL நிறுவனம் ARAI நிறுவனத்துடன் e - Mobility என்ற திட்டத்திற்க்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

11. BSE யின் முதல் பெண் இயக்குனராக ஜெய்ஸ்ரீ வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

12. ICC கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

முக்கிய தினங்கள் 

13. மே 3 - சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம். 2019 ஆண்டிற்கான கருத்துரு: “ஜனநாயகத்திற்கான ஊடகம்: பத்திரிக்கை மற்றும் தவறான தகவல்களில் தேர்வுகள்” (Media for Democracy : Journalism & Elections in Times of Disinformation)






Previous Post Next Post