நடப்பு நிகழ்வுகள் மே 3, 2019








தேசிய செய்திகள் 

1. சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனையானா கௌரி ஷியோரனை ஹரியானா மாநில அரசு தனது தட்டம்மை மற்றும் ரூபெல்லா (MR) தடுப்பூசி பரப்புரைக்கான நல்லெண்ண தூதராக (Brand Ambassador) நியமித்துள்ளது.

2. தொடர்ந்து அதிக ஆண்டுகள் மாநில முதல்வராக இருந்த பெருமையை சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் பெற்றுள்ளார்.

3. காந்தி தி ரைட்டர் என்ற புத்தகத்தை பாபாணி பட்டாச்சார்யா என்பவர் எழுதியுள்ளார்.

4. சிப்ரி (SIPRI) அறிக்கைபடி இராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது  இடத்தில் உள்ளது. மேலும் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாமிடத்திலும் சவுதி அரேபியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

5. சந்திராயன்-2 விண்கலத்துடன் ரோவர்(பிரக்யான்) என்ற ஆய்வு வாகனத்தையும் சேர்த்து இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. மேலும் இதனுடன் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) என்ற இரு விண்கலத்தையும் விண்ணில் செலுத்த உள்ளது.

வர்த்தக செய்திகள் 

6. அதிக GST வரி வசூல் ஆன மாதங்களின் பட்டியலில் 1.13 லட்சம் கோடி வரிவசூலுடன் ஏப்ரல் 2019 முதலிடத்தில் உள்ளது.

விளையாட்டு செய்திகள் 

7. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், சர்வதேச அளவில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா முதலிடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

8. ஆடவர் ஒருநாள் சர்வதேச போட்டியில் முதல் முறையாக களநடுவராக கிளைர் போலோசக்(ஆஸ்திரேலியா) என்ற பெண் நடுவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரங்கல் 

9. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த பி. சுபன் ரெட்டி காலமானார். இவர் சென்னை நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.





Previous Post Next Post