தேசிய செய்திகள்
1. பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக, இந்தியன் வங்கிக்கு தமிழக அரசானது சிறந்த வங்கிக்கான விருதை வழங்கியுள்ளது.
2. மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் நான்காவது நிலநடுக்கமானி (Seismometer) ஏற்படுத்தப்படும் என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS – National Centre of Seismology) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை ஆகியவை அறிவித்துள்ளது.
3. “நெகிழி கழிவுகளற்ற இந்தியாவிற்கான” கீதமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஹர்ச வர்த்தனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 7 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
4. புதுடெல்லியில் நடைபெற்ற புத்தாக்கம் மற்றும் நிர்வாகம் மீதான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மாநாட்டின் 3வது பதிப்பின் போது சர்வதேச தரத்திலான வசதிகளுடன் நவீனப் போக்குவரத்து அமைப்பை அளித்ததற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு புதுமைக்கான கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.
5. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவராக பகவான் லால் சஷினி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
6. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆளில்லா செயற்கைக்கோளான பால்கன் - 9 - ஐ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
7. விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான அறிவை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் இஸ்ரோவானது (ISRO) “இளம் விஞ்ஞானி கார்யக்ரம்” (Yuva Vigyani Karyakram) என்ற “இளம் அறிவியலாளர் திட்டம்” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
8. சீனாவின் ஹாங்ஷீ நகரில் வரும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் முதன்முறையாக ஓசேனியா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.