நடப்பு நிகழ்வுகள் மார்ச் 17, 2019

தேசிய செய்திகள் 
1. அர்விந்த் லட்தா இந்தியாவின் செயல்பாட்டிற்கான மெர்சரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்
2. அமெரிக்க இராணுவ படை மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) துறைக்கும் இடையே இராணுவ கூட்டு பயிற்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது
3. உச்சநீதிமன்றம், மூத்த வழக்கறிஞரான பி.எஸ். நரசிம்மவை கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான பல்வேறு சிக்கல்களை தீர்ப்பதற்கான மத்தியஸ்தராக நியமித்துள்ளது
4. குஜராத்தின் காந்திநகரில், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதுமை மற்றும் தொழில் முனைவோர்  விழாவை (FINE) துவக்கி வைத்தார்.
5. இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் விருதான கீர்த்தி சக்ரா விருதானது (Kirti Chakra Award), மேஜர் துஷார் கௌபா (Major Tushar Gauba) மற்றும் ராஜேந்திர குமார் நயன் (Rajendra Kumar Nain) ஆகியோர்க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் வழங்கப்பட்டது.
6. இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் எதிர்கால தொழில்நுட்ப திட்டங்களுக்கு ஏற்றவாறு மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக இஸ்ரோவானது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT – Roorkee) ரூர்க்கி உதவியுடன் விண்வெளி தொழில்நுட்ப மையத்தை (Space Technology Cell) அமைக்க உள்ளது.
7. மனிதவள ஆதார நிறுவனமாக மெர்சர் அமைப்பு வெளியிட்ட வாழ்க்கைத் தரம் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிஷ் (Zurich) நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவின் ஹைதராபாத் நகரம் 143வது இடத்தில் உள்ளது.
8. தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான புதுமை மற்றும் தொழில்முனைவோர்க்கான விழாவை, (FINE – Festival of Innovation and Entrepreneurship) குஜராத்தின் காந்திநகரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
வர்த்தக செய்திகள் 
9. எஸ்பிஐ வங்கி முதல் முறையாக கார்டு இல்லாத பண பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் யோனோ கேஷ்(YONO Cash) மூலம் கார்டு இல்ல பண பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும்.
விளையாட்டு செய்திகள்
10. இந்தோரின் ஹால்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி டிராபியை மகாராஷ்டிராவைத் தோற்கடித்து கர்நாடகா கிரிக்கெட் அணி வென்றது
முக்கிய தினங்கள் 
11. மார்ச் 16 - தேசிய தடுப்பூசி தினம் (National Vaccination Day)
Previous Post Next Post