நடப்பு நிகழ்வுகள் மார்ச் 14,2019

உலக செய்திகள் 
1. உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை ஜப்பான் நாட்டை சேர்ந்த "கனே டனாக"(117) என்ற பெண்மணி பெற்றுள்ளார்
2. Red Flag 2019 விமான கூட்டுப்பயிற்சி அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கிடையே அமெரிக்காவில் நடைபெற்றது.
தேசிய செய்திகள் 
3. குழந்தைகள் "ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை" சரளமாக கற்க "போலோ"(Bolo) என்ற மொபைல் செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
4. கேரளா மாநிலம் "மறையூர் ஜஃகிரிக்கு" புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது
5. மெக்ஸிகோவிற்கான இந்திய தூதுவராக மன்ப்ரித் வோக்ரா நியமிக்கப்பட்டுள்ளார்
6. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்க்காக இந்தியா நேபாளத்திற்கு ரூ.1742 கோடி வழங்கவுள்ளது
7. காமன்வெல்த் இயக்குனர் பிரஜாபதி திரிவேதிக்குஅமெரிக்காவில் ஹாரி ஹாட்ரி செயல்திறன் மேலாண்மை பயிற்சிகான விருது வழங்கப்பட்டது
8. இந்தியாவோடு ஆழமான மற்றும் வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஜப்பான் அரசு, மும்பையில் உள்ள "ரபீந்திர பாரதி" அருங்கட்சியத்திற்கு ரூ.22லட்சம் வழங்கியுள்ளது
9. மத்தியப் பிரதேச அரசின் நதி அறக்கட்டளை அமைப்பின் தலைவராக நம்தேவ் தியாகி நியமிக்கப்பட்டுள்ளார்
10. ஆதித்யா குமார் மிஸ்ரா, வேளாண் அறிவியல் பணியிட வாரியத்தின் (ASRB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள் 
11. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய ஓபன் லேசர் படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் உபமன்யு தத்தா(மும்பை) வெண்கலப் பதக்கம் வென்றார்.
Previous Post Next Post