உலக செய்திகள்
- நேபாளத்தின் புதிய உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதியாக ராணா (Rana) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஐ.நா பொதுச் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர்களாக, பெல்ஜியம், டொமினியன் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.
- 2019 ஆம் ஆண்டிற்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (Climate Change performance Index – CCPI) பட்டியலில் “ஸ்வீடன்” மிகவும் சிறப்பான செயல்திறன் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- CCPI -2019 குறியீட்டில் மொராக்கோ இரண்டாம் இடத்திலும் லித்வேனியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
தேசிய செய்திகள்
- 27-வது உலக புத்தக கண்காட்சியானது புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.
- தேசிய மனித உரிமைகள் ஆணையமானது பொதுச்சேவை மையங்கள் மூலமாக புகார்களை பதிவு செய்வதற்காக 14433 எனும் இலவச தொலைபேசி எண்ணைத் தொடங்கியுள்ளது.
- 44-வது “சர்வதேச விளம்பர சங்கத்தின் உலகளாவிய உச்சி மாநாடு” [44th global Summit of the international advertising association (IAA)] கொச்சியில் (கேரளா) நடைபெற்றது.
- சமீபத்தில் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “எளிதில் தொழில் தொடங்க உகந்த இந்திய மாநிலங்களின்” பட்டியலில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
- தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத் தலைவராக “மயில்சாமி அண்ணாதுரையை” தமிழக அரசு நியமித்துள்ளது.