RRB Tamil Current Affairs 5th January 2019

உலக செய்திகள்
  1. அண்டார்டிகாவின் உயர்ந்த சிகரமான “வின்சன் சிகரத்தை” ஏறிய முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற பெருமையை அருணிமா சின்ஹா (Arunima Sinha) என்பவர் பெற்றுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. இந்தியாவின், போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளராக பி.கே.சிங் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. இந்திய மருந்து மற்றும் மருத்துவ மாநாடு – 2019, கர்நாடகத்தின் பெங்களுரில் நடைபெற்றது. (India Pharma – 2019) இம்மாநாடு இரசாயணம் மற்றும் உரங்கள் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்டது.
  3. 18 முதல் 30 வயதிற்குள் இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு 2 இலட்சம் நிதியுதவி அளிப்பதற்காக மேற்கு வங்காள அரசானது கிரிஷக் பந்து திட்டம் (Krishak Bandhu Scheme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  4. விபத்து இல்லாத இரயில் பயணத்தை இலக்காகக் கொண்டு Mission Zero Accident என்ற திட்டத்தை இந்திய இரயில்வே செயல்படுத்தி வருகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. நிலவின் இருண்ட பகுதியை ஆராயும் செயற்கை கோளான சாங் இ – 4 (Chang e – 4) என்னும் செயற்கைகோள், ஜனவரி 3, 2019 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது.
  2. சூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றி வரும் “அல்ட்டிமா துலே (Ultima Thule) என்ற நுண்கோளின் அருகே சென்று, அமெரிக்காவின் “நியூ ஹொரைஸன்” என்ற விண்கலம் சாதனைப் படைத்துள்ளது.
Previous Post Next Post