உலக செய்திகள்
- இந்திய – ஜப்பானிய விமானப் படைகளுக்கு இடையேயான, ஷினியு மைத்ரி – 18 (SHINYUU Maitri – 2018) என்ற இருதரப்பு கூட்டுவிமானப்படை பயிற்சி இந்தியாவின் ஆக்ரா நகரில் டிசம்பர் 03-07 வரை நடைபெறுகிறது.
தேசிய செய்திகள்
- செலவினங்கள் துறை செயலராக இருந்த அஜய் நாராயண் ஜா (Ajay Narayan Jha), நிதித் துறையின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- கிம்பர்லி செயல்முறையின் (Kimberley Process) தலைமை பதவிக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய திறன்கள் (India Skills) அறிவிக்கையின் 6-வது பதிப்பின் படி, இந்தியாவில் அதிகபட்ச வேலைவாய்ப்பு திறன்களுடன், ஆந்திரப் பிரதேச மாநிலமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- நாட்டில் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், 181 என்ற இலவச தொலைபேசி எண் மத்திய அரசு அறிமுகம் செய்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ரஷ்ய நாட்டின் “சோயுஸ் எம்.எஸ்.11” (SOYUZ MS-11) ரக இராக்கெட், மூன்று விண்வெளி வீரர்களுடன், டிசம்பர் 03 அன்று கஜஸ்தானிலுள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செலுத்தப்பட்டது.
- அமெரிக்காவின் வாசிங்டனில் உள்ள அறிவியலாளர்கள் ரேடியோ அதிர்வெண் கதிரியக்கத்தினைப் பயன்படுத்தி முதன்முறையாக என்சைம்களை உருவாக்கியுள்ளதாக, ACS உயிரிபொருட்கள் அறிவியல் மற்றும் பொறியியல் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
- உலக மண் தினம் (World Soil Day) – டிசம்பர் 05