உலக செய்திகள்
- கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் திறனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்தல், எல்லை மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் வணிகங்களை எளிதாக்குதல் ஆகியவற்றிற்காக ஹாட்லைன் (Hot Line) ஒன்றை அமைக்க இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.
- பெட்ரோலியப் பொருள்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான “ஒபக்” (OPEC – Organisation of the Petroleum Exporting Countries) அமைப்பில் இருந்து கத்தார் விலகப் போவதாக அறிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
- காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான விழிப்புணர்விற்காக, நுரையீரல் ஆரோக்கியம் மீதான 50வது ஒன்றிய சர்வதேச மாநாடானது 2019ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக நுரையீரல் நோய்க்கு எதிரான சர்வதேச ஒன்றியமானது அறிவித்துள்ளது. (50th Union World Conference on Lung Health). இம்மாநாட்டின் கருத்துரு : “அவசர நிலையின் முடிவு : அறிவியல், தலைமைத்துவம், நடவடிக்கை” (Ending the Emergency : Science, Leadership, Action).
- இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் பங்குபெற்ற G-20 உச்சி மாநாடு அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்றது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ரஷ்யாவின் அரசு விண்வெளி நிறுவனமான, ரோஸ்காஸ் – மோஸ் ஆனது மாரத்தன் (Marathon) எனப் பெயரிடப்பட்ட செயற்கைகோள் அமைப்பினை (new satellite system) தொடங்க உள்ளது.
விளையாட்டு செய்திகள்
- அமெரிக்காவின் லால் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டிற்கான WBA உலக குத்துச் சண்டை ஹெவிவெயிட் போட்டியில் அமெரிக்காவின் “டியோன்டே வைல்டர்” பிரிட்டனின் டைசன் பியுரிக்-யை வென்று 2018 உலக குத்துச் சண்டை சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
- 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்தரா சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் உயரிய கவுரவமான “புளு கிராஸ் விருது”-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.