உலக செய்திகள்
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சகந்த் என்ற போர் கப்பலை ஈரான் தனது கடற்படையில் இணைத்துள்ளது.
- இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான விமானப்படை பயிற்சியான “COP India – 2018” இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் கலைகுண்டா விமான நிலையத்தில் நடைபெற உள்ளது.
- BFR (Big Falcon Rocket) – இராக்கெட்டின் பெயரை “ஸ்டார் ஷிப்” என மாற்றுவதாக ஸ்பேஸ் X நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான “எலன் மஸ்க்” என்பவர் அறிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
- 2022ஆம் ஆண்டு ஜி 20மாநாட்டை இந்தியா நடத்தும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
- இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தில், தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபர் சிரில் ராமபோஸா கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.
- இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
- இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷண் சமிதி போன்ற அமைப்புகள் யுனெஸ்கோவுடன் (UNESCO) இணைந்து, 3 நாள் “தென் ஆசிய பிராந்திய இளைஞர் சமாதான மாநாட்டை (South Asia Regional Youth Peace Conference) “புதுடெல்லியில்” நடத்த உள்ளது.
- கல்வி பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவின் ஐ.ஐ.டி – கரக்பூர் (IIT – kharagpur) மற்றும் ஆலாந்த் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தாகியுள்ளது.
- நாகலாந்தின் வளமான கலாச்சாரம் மற்றும் கைத்தொழில்கள், விளையாட்டுகள், உணவு வகைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கான, 19-வது “ஹாரன்பில்” திருவிழா நாகலாந்து மாநில தலைவர் ஹோகிமா அருகில் உள்ள கிஸ்மா கிராமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார்.
- “சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் மத்திய பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு & காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்கள் 100 சதவிகிதம் மின்சார இணைப்பை பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- வான்வெளி பாதுகாப்பிற்கான நவீன ஏவுகணைகளை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
- 20 – 30 வினாடிகளுக்குள் முழு மனித உடலையும் ஸ்கேன் செய்து முப்பரிமாண படத்தை பிடிக்கக்கூடிய உலகின் முதலாவது மருத்துவ படவியல் ஸ்கேனர், அமெரிக்காவின் டேவிஸ்-ல் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஷாங்காய் – ஐ அடிப்படையாக கொண்ட யுனைடைட் இமேஜிங் ஹெல்த்கேர் (UIH) ஆகியோரின் கூட்டிணைவால் உருவாக்கப்பட்டது.
வர்த்தக செய்திகள்
- மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்க ராணுவத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டிக்கான ரூ.3,343 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைத் பெற்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நார்வே வீரர் கார்ல்சென், சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார்