RRB Tamil Current Affairs 1st December 2018

உலக செய்திகள்
  1. ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசர நிதியமானது (UNICEF – United Nations International Children’s Emergency Fund) குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட வடகிழக்குப் பிராந்தியத்திற்காக முதல் இளைஞர் பரப்புனராக அசாம் பிரபல பாடகியான நஹீத் அப்ரின் என்பவரை நியமித்துள்ளது.
  2. உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதியான இண்டர்கான்டினென்டல் ஷாங்காய் வொண்டர்லேண்ட் விடுதியானது சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் சாங்கியாங் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
  1. தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்காக தொடங்கப்பட்ட முதல்வரின் விரைவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட அரசு மருத்துவக் காப்பீட்டுத் தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  2. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில், பெண்ணை வடகரை மேற்கோவலூர் நாட்டு இலச்சியமுடையான் உழியன் மாதன் என்பவர் சோழாந்தகப் பல்லவராயன் வடுகன் ஆளவந்தான் நினைவாக, அமைக்கப்பட்ட தூம்பானது, திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  3. தீனதயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY – NULM/Deendayal Antyodaya Yojana. National Urban Livelihoods Mission) கடன்களை விரைவாக செயலாக்கம் செய்வதற்காக, வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகமானது, மலிவான கடன் வசதி மற்றும் வட்டி உதவித் தொகை அணுகலுக்காக (PAiSA) பைசா என்ற மின்னணு தளத்தை புது டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி நிதி மற்றும் நகர்புற திட்டமிடல் மீதான தேசிய பட்டறையின் போது தொடங்கப்பட்டது.
  4. மத்திய நேரடி வரிகளுக்கான ஆணையத்தின் உறுப்பினரான அகிலேஷ் ரஞ்சனை புதிய நேரடி வரிச் சட்டத்தை வரைவு செய்யும் பணிக்குழுவின் தலைவராக மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது. இவர் அரவிந்த் மோடிக்கும் பதிலாக பதவியேற்க உள்ளார்.
வர்த்தக செய்திகள்
  1. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்ளீட்டு செலவு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவு போன்ற காரணங்களால், இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் (2018-19) 2-வது காலாண்டில் 1 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Previous Post Next Post