உலக செய்திகள்
- கண்டம் விட்டு கண்டம் பாயும் மற்றும் 600 கி.மீ. தொலைவில் உள்ள எதிரிகளின் ஏவுகணைகளை துல்லியமாக குறி வைத்து தாக்கும் திறன் கொண்ட “எஸ் – 400” என்ற ஏவுகணையை சீனாவானது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
தேசிய செய்திகள்
- இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு இடையேயான, முத்தரப்பு சபாஹர் ஒப்பந்தத்தின் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் குழுவின் முதல் கூட்டமானது, ஈரானின் துறைமுக நகரமான சபாஹரில் நடைபெற்றது.
- மறைந்த இசையமைப்பாளரான, லட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் மற்றும் பின்னணி பாடகர் உஷா தீமோத்தேயு ஆகியோருக்கு, முகமது ரஃபி விருது வழங்கப்பட்டது.
- மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா, அஞ்சல் துறையின் மின்னணு வர்த்தக தளத்தினை தொடங்கி வைத்தார்.
- 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் மாநாடு ஒடிஷா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருள் (Theme) – “Science, Technology and Innovations for it clean, green and Health Nation” என்பதாகும்.
- புதுடெல்லியில் நடைபெற்ற திருமதி இந்தியா – 2018 (Mrs. India – 2018) போட்டியில் மத்திய பிரதேச மாநிலத்தின் “திவ்யா பட்டிதார் ஜோஷி” முதலிடம் பிடித்து, திருமதி இந்தியா – 2018 என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
வர்த்தக செய்திகள்
- ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்துக்கு, 2018ஆம் ஆண்டுக்கான, தங்கப் பதக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
- நடப்பு ஆண்டில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில், முதல் முறையாக சீனாவை, இந்தியா முந்தி உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- விண்வெளிக்கு 3 வீரர்களை அனுப்பும் இஸ்ரோவின், ‘ககன்யான்’ திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இரயில் பெட்டிகளில் மனிதனால் செல்ல இயலாத இடத்தை சோதனை செய்து புகைப்படம் எடுப்பதற்காக, இரயில்வே துறையானது “உஸ்தாத்” (USTAAD)” என்ற ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளது. (USTAAD – Undergear Surveillance Through Artificial Intelligence Assisted Droid).
விளையாட்டு செய்திகள்
- கோல்ப் விளையாட்டில் ஆசிய டூர் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது (Asian Tour Order of Merit in golf) பெற்ற, இளம்வீரர் மற்றும் 5-வது இந்தியராக, சுபாங்கர் ஷர்மா ஆகியுள்ளார்.