RRB Tamil Current Affairs 28 December 2018

உலக செய்திகள்
  1. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு இடையேயான முத்தரப்பு சபாஹர் ஒப்பந்தத்தின் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் குழுவின் முதல் கூட்டமானது ஈரானின் துறைமுக நகரமான சபாஹரில் நடைபெற்றது.
  2. இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கிடையே, தூதரக உறவுகள் ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், பூடான் பிரதமரான “லோட்டே ஷெரிங்க் (Lotay Tshering)” இந்தியாவிற்கு வந்துள்ளார்.
தேசிய செய்திகள்
  1. லோக் ஆயுக்கா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வு பெட்ரா நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  2. நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியலில், தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  3. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94வது பிறந்தநாள் விழாவில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்காக “பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய்” சர்வதேச பள்ளியை மகாராஷ்டிரா மாநில அரசு தொடங்கியுள்ளது.
  4. மகாராஷ்டிராவின் மும்பைக்கு அருகில் உள்ள, யுரானின் கரான்ஜா கடற்படை நிலையத்தில், ‘INHS சந்தானி’ என்ற 10-வது கடற்படை மருத்துவமனை கப்பலை, இந்திய கடற்படையானது செயல் நிலைப்படுத்தியுள்ளது.
  5. தமிழ் இலக்கிய தோட்டம் அமைப்பின், 2018ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, எழுத்தாளர் “இமையம்” என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  6. இந்திய ஆடவர் குத்துச் சண்டை அணிக்கான பயற்சியாளராக துரோணாச்சாரியா விருது வென்ற, சி.ஏ. குட்டப்பா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
  1. ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்து ஆய்வு செய்வதற்காக, ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ‘பிமல் ஜலான்’ தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. மின்சாரம் இல்லாமல், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டியை, அமெரிக்காவின் பெனிக் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. மகாராஷ்டிராவின் ஜல்னாவில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற 62- வது மகாராஷ்டிரா கேசரி மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மல்யுத்த வீரரான “பாலாரபிக் ஷேக்” என்பவர் 2018 ஆம் ஆண்டின் “மகாராஷ்டிரா கேசரி” என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
Previous Post Next Post