உலக செய்திகள்
- ஐக்கிய நாடுகளின் விதிமுறைகளின்படி உலகிலேயே முதன் முதலாக குழந்தைகளுக்கு ஆளில்லா விமானங்களின் உதவியுடன் தடுப்பூசிகளை வழங்கும் முதல் நாடாக வனுவாட்டு (Vanuatu) ஆகியுள்ளது.
தேசிய செய்திகள்
- நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது “பிரணாப் குமார் தாஸை” மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரிக்கான வாரியத்தின் (CBIC – Central Board of Indirect Taxes and Customs) தலைவராக நியமித்துள்ளது.
- இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் நிறுவனமான தேசிய புற்றுநோய் நிறுவனமானது (NCI – National Cancer Institute – NCI) ஹரியானாவின் ஜஜ்ஜாரில் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் பொருளாதாரமானது 4 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டுவதற்காக கட்டாயமாக எடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றிய, நியூ இந்தியா @ 75 என்ற யுக்திசார் ஆவணத்தை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, 2018ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் இராஜஸ்தான் மாநிலத்தின் “கலு காவல் நிலையம்” முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- நிலவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் – 2 விண்கலத்தை 2019 ஜனவரி மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- ஹரியானா மாநிலத்தின் கல்வித் துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் அம்மாநில அரசு “சிக்ஷ சேது” (Shiksha Setu) என்னும் கைப்பேசி செயலியை தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள பெண்களுக்கான சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் பி.வி. சிந்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மேலும் தாய் ஜீ யாங் முதல் இடத்தையும் நஜோமி ஒகுஹரா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.