உலக செய்திகள்
- பருவநிலை மாற்றத்தைக் கண்காணித்து, அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரான்ஸின் உதவியுடன் சீன விண்வெளி ஆய்வு அமைப்பு முதல் முறையாக உருவாக்கியுள்ள செயற்கைக்கோளை, ஏந்திச் செல்லக்கூடிய சீனாவின் லாங்க் மார்ச் 2சி ராக்கெட்டானது (Long March 2C) கோபி பாலைவனத்திலுள்ள ஜியூகான் ஏவுதளத்திலிருந்து (Jiuquan Satellite Launch Center) விண்ணில் ஏவப்பட்டது.
- இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் கட்சி, கூட்டணியை விட்டு விலகியதால், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார்.
- சீனாவின் உதவியுடன் 2022 ஆம் ஆண்டில் முதல் முறையாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
- இந்தியாவில் 3 நாள் நடைபெறும், இயற்கை விவசாயத் துறையின் மிகப்பெரிய கண்காட்சியான BIOFACH -இன் 10 வது பதிப்பை மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
- செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களில் மிகவும் மேம்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருப்பதாக பின்லாந்தைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் லைஃப்ரா தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் செயற்கை நுண்ணறிவுப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இந்தியா 13 வது இடத்திலும் இருக்கின்றன.
- இந்தியா – ஜப்பான் இடையிலான 13-ஆவது வருடாந்திர மாநாடு டோக்கியோவில் நடைபெற்றது.
விளையாட்டு செய்திகள்
- பேஸலில் நடைபெற்ற சுவிஸ் உள்ளரங்க (Swiss Indoor at Basel) டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் வென்றதின் மூலம், ரோஜர் பெடரர் தனது 99- ஆவது ஏடிபி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
- உலக சேமிப்பு தினம் – அக்டோபர் 30