உலக செய்திகள்
- அமெரிக்கா – ஜப்பான் கூட்டுத் தயாரிப்பிலான இலக்கை இடைமறித்து துல்லியமாக தாக்கும் ஏவுகணையான எஸ் எம் – 3 பிளாக் 2A(sm-3 Block IIA) என்ற இடைமறி ஏவுகணை சோதனையை அமெரிக்க இராணுவம் ஹவாய் தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
- இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவிற்கானத் தூதுவருமான சச்சின் டெண்டுல்கர், பூடானின் தலைநகரான திம்புவில் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WASH Innovation(water, sanitation and Hygiene) புதுமைத் திட்டத்திற்கான வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
- வேளாண் விஞ்ஞானி S. சுவாமிநாதன், புது டெல்லியில் இந்திய உணவு மற்றும் விவசாயக் குழுவினால் (Indian Council of Food and Agriculture – ICFA) ஏற்படுத்தப்பட்ட முதலாவது உலக வேளாண் பரிசினை வென்றுள்ளார் (First World Agriculture Prize – 2018 – M.S. Swami Nathan)
- மியான்மர் ஒன்றியக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக சௌரப் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் ஈரானின் இந்தியத் தூதராக உள்ளார். இவர் விக்ரம் மிசிரி என்பவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்திகள்
- பஞ்சாப் மாநில அரசானது புற்றுநோய் மற்றும் மனித டி.என்.ஏ வை பாதிப்பிற்குள்ளாக்கும் களைக் கொல்லியான க்ளைபோசாட்டின்(GLYPHOSATE) விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது புது டெல்லியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் கூட்டுச் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான(SPARC – Scheme For Promotion of Academic and Research Collaboration) வலைப் பக்கத்தை(Portal) தொடங்கியுள்ளது.
- 2018ம் ஆண்டின் உலகளாவிய விவசாயத் தலைமைக்கான மாநாடு புது டெல்லியில் துவங்கியது.(2018 – Global Agriculture Leadership Summit) மாநாட்டின் கருத்துரு: சந்தையுடன் விவசாயிகளை இணைத்தல் (Connecting Farmers to Market).
- அரியானா மாநில அரசு, நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் கால்நடைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவைகளை அளிக்க ‘பசு சஞ்சீவனி சேவா’ என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
- மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் புது டெல்லியில் 10வது அணுசக்தி மாநாட்டை துவக்கி வைத்தார். இதற்கான கருத்துரு – “அணுசக்தி சுத்தமான மற்றும் அடிப்படையான ஆற்றல்” என்பதாகும்