RRB Tamil Current Affairs 20th November 2018

உலக செய்திகள்
  1. கிரிகோரோவிச் போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான உடன்பாட்டில் இந்தியா - ரஷ்யாவுடன் கையேழுத்திட்டுள்ளது
  2. சீனாவின் இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், இயற்கை சூரியனை விட அதிக வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர்.
தேசிய செய்திகள்
  1. கிரிகோரோவிச் போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான உடன்பாட்டில் இந்தியா - ரஷ்யாவுடன் இன்று கையொப்பம்
  2. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தீர்மானம் ஒடிசா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  3. 2017ம் ஆண்டின் இந்திரா காந்தி அமைதிக்கான விருது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  4. பீகார் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக “அமரேஷ்வர் பிரதாப் சாஹி” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. தொழில்துறை பங்குதாரர்கள் ஒன்றிணையவும், திரைப்படம், இசை, விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் துறைகளில் புதிய அணுகுமுறைகளில் விவாதிக்கவும் ஒரு மேடையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, உலகளாவிய டிஜிட்டல் பொருளடக்க சந்தை Global Digital Content Market – GDCM) மாநாடு – 2018 ஆனது புதுடெல்லியில் நடைபெற்றது.
  6. இந்தியாவில் முதலாவதாக செவிலியர் பட்டயப் பயிற்சியில் சேரும் மூன்றாம் பாலினத்தவராக, தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த திருநங்கையான தமிழ்ச்செல்வி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. (Table Tennis) IBSF சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP பிரிவில் இந்திய வீரரான பங்கஜ் அத்வானி மியான்மரின் “த்வே ஓவைத்” என்பவரை தோற்கடித்து, 2018ம் ஆண்டிற்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. அரசு பத்திரங்கள் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் “என்எஸ்இ கோ பிட்” என்ற புதிய மொபைல் செயலியையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது.

Previous Post Next Post