உலக செய்திகள்
- இந்தியா – சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் பங்கேற்கும், 21-வது சுற்றுப் பேச்சுவார்த்தை வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சீனாவின் துஜங்யான் நகரில் நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்
- கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், டிஜிட்டல் மயமாக்கும் முதன்மை முயற்சியாக, ஆசிரியர் பயிற்சியை இணையம் மூலம் பெறும் வகையில் “கூல்” என பெயரிடப்பட்டு உள்ள, திறந்த நிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
- மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் 24-வது தலைமை நீதிபதியாக “நீதிபதி சஞ்சய் குமார் சேத்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தின் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- 2018 ஆம் ஆண்டிற்கான “வாழ்நாள் சாதனையாளர் விருது” டாக்டர் மார்த்தா ஃபரெல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இளைஞர்களை கூட்டுறவு வணிக முயற்சிகளுக்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC – National Cooperative Development Corporation) “யுவ சஹாகர்” (Yuva Sahakar) என்ற கூட்டுறவு தொழில் நிறுவன ஆதரவு மற்றும் புத்;தாக்கத் திட்டத்தினை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
- புற்றுநோய் ஆராய்ச்சியில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்ந்து ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து (UK) நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
- 2019 ஆம் ஆண்டின் இந்தியக் குடியரசு தினவிழா அணி வகுப்பில் “தலைமை விருந்தினராக (Chief Guest at the 2019 Republic Day Parade of India) தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபர் “சிரில் ராமபோசர்” பங்கேற்க உள்ளார்.
முக்கிய தினங்கள்
- சாலை போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தினம் நவம்பர் 18 (World Day of Remembrance for Road Traffic Victims)