உலக செய்திகள்
- “உலகளாவிய முதியோர் மற்றும் வயதானவர்களுக்கான மனித உரிமைகள்” என்ற தலைப்பின் கீழ் தென்கொரியாவின் சியோல் நகரத்தில், 3வது ஆசிய ஐரோப்பிய சந்திப்பு மாநாடு (ASEM – Asia Europe Meeting) நடைபெற்றது.
- நிதி அமைச்சகத்தின் அடுத்த பொருளாதார ஆலோசகரைத் தேர்வு செய்வதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பிமல் ஜலன் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய செய்திகள்
- இந்தியா, ஜப்பானிடமிருந்;து 7000 கோடி ரூபாய் மதிப்பிலான 18 புல்லட் இரயில்களை வாங்க உள்ளது
- நபார்டு வங்கியானது ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (Rural Infrastructure Development Fund – RIDF) கீழ் மேற்கு வங்கத்தின் நீர்பாசனத் திட்டங்களுக்கும், வெள்ளப் பாதுகாப்பு திட்டங்களுக்கும் சுமார் 335 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
- யூத் அபியாஸ் – இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கிடையேயான இராணுவ கூட்டு பயிற்சி உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ளது
- ஸ்மார்ட் சிட்டீஸ் இந்தியா என்னும் திட்டத்தால் நடைபெறும் சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரத்தில் நடைபெறும் வேலைகள் குறித்து விளக்குவதற்காக 4வது “இந்தியாவின் நிலையான ஸ்மார்ட் நகரங்கள் மாநாடு” கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுரில் ஸ்மார்ட் இந்தியா திட்ட இயக்குநர் B. இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானத்திற்கு நடுவானில் மறு எரிபொருள் நிரப்பும் பணியானது முதன்முதலாக இந்திய விமானப் படையால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
- கடல்நீரை கண்காணித்து அதனால் பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகளை கண்டுபிடிப்பதற்காக சீனாவானது “HY-1C” என்னும் கடற்சார் செயற்கைகோளை லாங் மார்ச் 2C என்னும் இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
முக்கிய தினங்கள்
- செப்டம்பர் 08 – சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் கருப்பொருள் “Literacy and skills development” (எழுத்தறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துதல்) என்பதாகும்