TNPSC Tamil Current Affairs 10th September 2018

உலக செய்திகள்
  1. துருக்கியில் உள்ள இஜ்மிர் நகரில் நடைபெற்ற “87வது இஜ்மீர் சர்வதேச வர்த்தக கண்காட்சியில்” இந்தியா சார்பில் “மூல இந்தியா” என்ற பெயரில் ஒரு மெகா வணிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
  2. சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் பைகளால் கேடு விளைவதை தடுக்கும் வகையில், தண்ணீரில் கரையும் பிரத்யேக பையை சீன விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
தேசிய செய்திகள்
  1. ஷிக்கா ஷர்மா பதவி விலகிய பிறகு, அமிதாப் சவுதரியை அக்ஸிஸ் வங்கி தனது நிர்வாக இயக்குனராகவும், CEO ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்
  2. ஒடியா கவிஞர் சத்ருகனா பாண்டவ் தனது கவிதைத் தொகுப்பு ‘மிஸ்ரா துருபத்‘க்காக கௌரவமான‘ சரளா புர்கர் ‘விருது பெற்றார்.
  3. நகர்புற மேம்பாட்டுக்கான திட்டங்களை நிலையாக செயல்படுத்தவும், கார்பன் மோனாக்ஸைடு போன்ற பசுமை இல்ல வாயுவை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட MOBILIZE YOUR CITY” (MYC) மீது இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கலாச்சாரம், வணிகம் மற்றும் கல்வியாளர்களுக்கிடையேயான ஊடாடல்கள் போன்றவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பானும் குஜராத்தும் கையெழுத்திட்டுள்ளன.
வர்த்தக செய்திகள்
  1. விஞ்ஞானிகள், தகவல் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மற்றவர்கள் தங்கள் பணிக்காக தேவைப்படும் தகவல்களை பெற உதவிடும் வகையில் பலதரப்பட்ட மொழிகளில் இயங்கி தகவல்களை கொடுக்கும் Dataset Search என்ற புதிய தேடல் இயந்திரத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. காண்டினென்டல் கோப்பை –ஆஸ்டரவா நகர், செக்குடியரசில் நடக்கிறது. இந்திய தடகள வீரர் அர்பிந்தர் சிங் IAAF தடகள காண்டினென்டல் கோப்பை போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
  2. அமெரிக்காவில் நடந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
  3. டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீராங்கனையானார் நவோமி ஒசாகா. யு.எஸ். ஓபன் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி பட்டத்தை வென்றார்
  4. உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார்.
  5. தென் கொரியாவின் சாங் வான் நகரில் 52-வது உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் பிரிவில் ஆடவருக் கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப் பதக்கம் வென்றார்.
  6. யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ஜேமி மர்ரே – பெதானி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
Previous Post Next Post