RRB Tamil Current Affairs 18th August 2018

உலக செய்திகள்
  1. நிலவின் மற்றொரு பக்கத்தை ஆய்வு செய்வதற்காக சீன அரசு Change – 4 என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது
தேசிய செய்திகள்
  1. கேரளா மற்றும் தமிழ்நாடு இடையே முல்லைப் பெரியாறு மற்றும் ஆழியாறு உள்ளிட்ட அணைகளின், வெள்ள நீர் வெளியேற்றத்தை ஒருங்கிணைக்க மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ‘நரேந்திர குமார்’ தலைமையில் மத்திய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  2. இராஜஸ்தான் மாநில அரசு செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதம் ஆக(Month of Nutrition) கடைபிடிக்கவுள்ளது
  3. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மேற்கு வங்காள மாநில அரசு “கன்னியாஸ்ரீ பிரகல்பா திட்டத்தை” (Kanyashree Prakalpa Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது
  4. மத்திய பிரதேச மாநில அரசு அவசர நேரத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு Dial 100 police என்ற மொபைல் செயலி-யை அறிமுகப்படுத்தியுள்ளது.
  5. பூனாவைச் சேர்ந்த வானியலாளர்கள் இந்தியாவின் மிகப்பெரிய மீட்டர் அலை ரேடியோ தொலைநோக்கியான GMRT –ஐ (Giant Metre Wave Radio Telescope) பயன்படுத்தி சுமார் 12 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்துளள் கதிர்வீச்சு (ரேடியோ) பால்வெளி மண்டலத்தை (Radio Galaxy) கண்டறிந்துள்ளனர்.
நியமனங்கள்
  1. ஐ.நா பொதுச் சபையின் அடுத்த 73வது தலைவராக மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா கார்செஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. அபுதாமி மாஸ்டர்ஸ் – 2018 செஸ் சாம்பியன் போட்டியின் மூலம், இந்தியாவின் “53-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக” கேரளாவைச் சேர்ந்த “நிகில் சரின்” தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

Previous Post Next Post