உலக செய்திகள்
- சிக்கிம் மாநிலத்தில் உள்ள ‘கஞ்சன்சுங்கா உயிர்கோளக் காப்பகம்’(Khangchendzonga Biosphere Reserve) UNESCO-வின் உலக உயிர்கோளக் காப்பக வலையமைப்பில் (WNBR – World Network of Biosphere Reserve) சேர்க்கப்பட்டுள்ளது.
- உலகின் மிகப் பெரிய பறவை சிற்பம் (World’s Largest Bird Sculpture) கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சத்திய மங்கலத்தில் உள்ள ஜடாயு தேசிய பூங்காவில் அமைக்கப்படவுள்ளது
தேசிய செய்திகள்
- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், ஏலம் எடுப்போருக்கான தகவல் மேலாண்மை அமைப்பை தொடங்கியுள்ளது.
- இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு (FIEO – Federation Of Indian Export Organization) உருவாக்கிய நிர்யாத் மத்ரா மொபைல் செயலியை மத்திய வணிகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டுள்ளார்.
- மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் சைபிரியாவில் விழுந்த விண்கல்லில் (Meteorites) இருந்து Uakitite என்ற புதிய தாதுப் பொருளைக் கண்டறிந்துள்ளனர்.
- Xingkong-2 – ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய (Hypersonic wave Rider) சீனாவின முதல் விமானமான ‘Xing kong-2 வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ‘அபினவ் பிந்த்ரா’ சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) வீரர்கள் குழுவின் உறுப்பினராக (Athletes Commission) நியமிக்கப்பட்டுள்ளார்.