உலக செய்திகள்
- புதுப்பிக்கத்தக்க வளங்களைப் பயன்படுத்தி ஆற்றலை சேமிக்கும் உலகின் முதலாவது தெர்மல் மின்கலன் தொழிற்சாலை ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது
- தாய்லாந்து நாட்டின் மூவாங் சாச்சொங் சோவா மாகாணத்தில் இந்தியா – தாய்லாந்து கூட்டு இராணுப் பயிற்சி – மைத்ரீ-2018 நடைபெறுகிறது
தேசிய செய்திகள்
- சுகாதாரா ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- வர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் கொரியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
- இந்தியா–கனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
- இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் ‘ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி’ (‘One District One Product’ Summit) என்ற தலைப்பிலான உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார் .
- கர்நாடக மாநிலத்தில் கிராமப்புற தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதற்காக ஸ்வச்செம்வே ஜெயேட் (Swachhamea Jayate) என்னும் பிரச்சாரத்தை கர்நாடக மாநில அரசு துவக்கியுள்ளது.
- இந்தியாவின் முதல் மொபைல் பரிமாற்று மண்டலம் (Mobile Exchange Zone) உத்திரப் பிரதேச மாநிலம் ‘நொய்டாவில் துவங்கப்படவுள்ளது
- கேரள சட்டப்பேரவையின் 60வது ஆண்டு விழாவினை (Diamond Jublee) குடியரசின் திருவிழாவாக (Festival on Democracy) திருவனந்தபுரத்தில் கொண்டாடப்படுகிறது.
- உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் நரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரோ தலைமையில் பதவியேற்றுக் கொண்டனர்.
- தொழில்நுட்பங்களின் தாக்கத்தை அதிகரிக்கவும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அதன் தொழில்துறை பயன்பாடுகளுக்கு இடையேயான இடைவெளியை குறைப்பதற்காகவும் ஸ்டார்ட் அப் இந்தியா அமைப்பு ‘Startup Academia Alliance Programme என்னும் நிறுவனத்தை துவக்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பில் இந்திய வீரர் நீராஜ் சோப்ரா கொடியை தாங்குகிறார்
முக்கிய தினங்கள்
- 10 ஆகஸ்ட்: உலக உயிரி எரிபொருள் தினம். அன்று இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, “National Policy on Biofuels 2018”,எனும் கையேட்டை வெளியிட்டார்.