உலக செய்திகள்
- சீனாவில் உள்ள குவிண்டோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவுள்ளது
- அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள நியூசியம் என்ற பத்திரிகையாளர்கள் மியூசியத்தில் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்களான கௌரி லங்கேஷ் மற்றும் சுதீப் தத்தா ஆகியோரின் நினைவு பொருட்கள் இடம்பெற்றுள்ளன
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலிய முதலிடத்திலும் சிரியா கடைசி இடத்திலும் உள்ளது
- 50 நாடுகள் தானாகவே முன்வந்து உலக சுற்றுசூழல் தினத்தன்று பிளாஸ்டிக் கழிவுகளை நீக்குவதாக ஐநா சபையிடம் தெரிவித்துள்ளன
- 100 ஆண்டுகளுக்கு அரை ஆயிட்காலம் கொண்ட நிக்கல்-63 கதிரியக்க ஐசோடோபை பயன்படுத்தி அணு பேட்டரியை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- மலேசியாவின் அட்டர்னி ஜெனெரலாக இந்தியாவை சேர்ந்த டாமி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
- கியூபா நாட்டிற்கான இந்திய தூதுவராக மது சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார்
- பவர் கிரிட் நிறுவனத்தின் தென் பிராந்திய சிஸ்டம்-2 வின் புதிய செயல் இயக்குனராக ஆர்.என். சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
- உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மொகல் சாராய் ரயில்நிலையமானது பண்டித் தீன்தயாள் உபத்தயாய என பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளது
- மும்பையில் தேசிய நீர் கொள்கை திட்டத்தின் கீழ் மும்பையிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வாட்டர் atm அமைக்கப்படவுள்ளது
- தூர்தர்சன் மற்றும் ஆல் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறைக்கு ரூ.617 கோடி நிதி அளித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- போர்ப்ஸ் நிறுவனம் உலகில் அதிக சம்பளம் பெரும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டது இதில் அமெரிக்காவை சேர்ந்த குத்துசண்டை வீரர் மேவெதா முதலிடத்தை பெற்றுள்ளார் மேலும் இந்தியாவை சேர்ந்த விராட் கோலி 83 வது இடத்தை பெற்றுள்ளார்
- ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ் மேன் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 2வது இடத்திலும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரவீந்த்ரா ஜடேஜா மற்றும் அஸ்வின் 2வது மற்றும் 3வது இடத்திலும் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ரவீந்த்ரா ஜடேஜா 2வது இடத்திலும் உள்ளனர்
- கிரிக்கெட் ஆஸ்திரிலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லாந்து பதவி விலகினார்