உலக செய்திகள்
- சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது
- சூரிய குடும்பத்திற்கு வெளியே வியாழன் கோளை விட4 மடங்கு அகலம் அதிகம் உள்ள வாஸ்ப்-127 பி என்ற கோளில் தண்ணீர் மற்றும் உலோகங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
- ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
- ஹரியானா மாநிலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை பராமரிப்பதற்காக அனைத்து துறையில் உள்ள ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது
- இந்திய ரிசெர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஐடிஐ வங்கி மேலாண் இயக்குனராக எம்.கே.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்
- காவேரி மேலாண்மை வாரியத்திற்கு புதுசேரி நீர்வளத்துறை செயலாளர் அன்பரசு பொதுப்பணித்துறை பொறியாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
- வங்கியில் இலவசமாக அளிக்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- தென் ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது தென் ஆப்பிரிக்காஅணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிஸோ ரபாடாவுக்கு 2வது முறையாக வழங்கப்பட்டுள்ளது
முக்கிய தினங்கள்
- ஜூன்-5 உலக சுற்றுச்சுழல் தினம்