உலக செய்திகள்
- உலக அளவில் தாஜ்மகால் அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த தலங்கல் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
- இந்த ஆண்டிற்கான புக்கர் விருதுக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஓல்கா தேக்கரசு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- சவுதி அரேபிய அரசு தங்கள் நாட்டில் "ரியால்" நாணயங்களை அறிமுக படுத்த உள்ளதாக நாணய ஏஜென்சி தெரிவித்துள்ளது.
- உலக தமிழ்ச்சங்கத்தின் சார்பாக 36 வது திருவள்ளுவர் சிலை நியூயார்க்கில் உள்ள மிடில் வில்லேஜ் கிறிஸ்தவ தமிழ்க்கோவிலில் மே 12 ல் திறக்கப்பட்டது.
- ரஷ்யாவின் போரெய் நீர்மூழ்கி கப்பலில் இருந்து நான்கு ஏவுகனைகளை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
- பொருளாதார மேதை மற்றும் கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்ன் ஒரே ஒரு கையெழுத்து இடம்பெற்ற ஒரு பக்கத்தின் பிரதி ரூ58 கோடிக்கு சீனாவின் பெய்ஜிங் தலைநகரில் ஏலத்தில் வாங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
- பிரதமர் மோடி அரசு முறை பயணமாக மே 29 முதல் ஜூன் 2 வரை சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- பிரதமர் அலுவலகம் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இணைந்து சமூக ஊடகங்களை கண்காணிக்க தகுந்த வல்லுனர்களை நியமிக்க உள்ளது.
- மத்திய நிதி அமைச்சகம் 2017-2018ஆம் ஆண்டில் மத்திய அரசின் நேரடி வருவாய் 10 லட்சத்து 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
- நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
வர்த்தக செய்திகள்
- மத்திய அரசு கிரிப்டோகரன்சி மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கலாம் என முடிவெடுத்துள்ளது.
- ஓஎன்ஜிசி,ஷெல்,ரிலையன்ஸ் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களின் அரசு பங்கீடான8 பில்லியன் பாலர் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- மாநிலத்துக்குள் இவே-பில் நடைமுறைக்கு வந்த பின் சரக்குகள் கொண்டு செல்ல பில் இல்லையேல் 100 சதவீதம் அபராதம் விதிக்க வணிக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
- உக்ரைன் நாட்டில் கிவ்வில் நாளை நடைபெற இருக்கும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியால்மட்ரீட் மற்றும் ஸிவர்பூல் அணிகள் மோதுகின்றன.
- டென்னிஸ் விளையாட்டின் இரண்டாவது கிராண்ட்சிலாம் போட்டி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 27 ஆம் தேதி துவங்குகிறது.