RRB Tamil Current Affairs 26th April 2018

உலக செய்திகள்
  1. நார்வே நாடானது பத்திரிகை சுதந்திரம் அளிப்பதில் முதலிடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா 138வது இடத்தில் உள்ளது.
  2. பிரிட்டனில் உள்ள கீல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் வாஸ்ப்-104பி என்ற கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
  3. வங்கதேச பிரதமர் ஷேக் அனிஷா விற்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
  4. ரஷ்யாவில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ 'வேரா' இண்டர்வியூ நடத்தும் வேலைகளை செய்து வருகிறது. மேலும் வேலை தேடுபவர்களை கண்டறிந்து அதுவாகவே அழைக்கும் பணிகளை மேற்கொள்கிறது.
  5. அமெரிக்காவில் மின்சாரம் செலுத்தி அதிக எடையை தூக்கும் திறன் கொண்ட செயற்கை தசைகளை அமெரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
  6. ஆழ்ந்த தூக்கத்தில் குறட்டை விடுவோருக்கு உதவ விஞ்ஞானிகள் "ஸ்லீப் இயர் பட்"என்ற காதில் அணியும் இயர் போனை கண்டுபிடித்துள்ளனர்.
  7. பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் குவாஜா ஆசிப்பை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. உச்ச நீதிமன்றத்தில் முதன்முறையாக "மல்ஹோத்ரா" பெண்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. இந்தியா யூடியூப் வளைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவிடுவதில் முதல் இடத்தில் உள்ளது.
  3. மத்திய அமைச்சரவை ஜப்பான் மற்றும் தென்கொரியாவிற்கு இரும்புதாது ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஐ.பி.எல் போட்டியில் தொடர் தோல்வியால் டெல்லி அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். அந்த அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  2. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்-ஐ துரோணாச்சாரியார் விருதுக்கு பிசிசிஐ   பரிந்துரை செய்துள்ளது.
  3. ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்கும் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுகா வென்றுள்ளார்.
  4. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி க்கு கேல் ரத்னா விருதும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்க்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதுக்கும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
  5. மத்திய அரசால் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை ஷிகார் தவான் மற்றும் ஸ்மிரிதி மந்தனா விற்கும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
வர்த்தக செய்திகள்

  1. இந்தியாவில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 8 சதவீதம் உயரும் என ஜப்பானின் நோமுரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
  2. ஜென்சார் டெக்னாலஜிஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனமானது காலாண்டில் ரூ.72.65 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
  3. ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நான்காம் காலாண்டில் 35 சதவீதம் லாபம் அதிகரித்துள்ளது.
Previous Post Next Post