- இசைஞானி இளையராஜா, தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி, யோகா பயிற்சியாளர் நானாம்மாள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
- எல்லையில் பணிபுரியும் இந்திய ராணுவ வீரர்கள் சீனாவின் 41 செல்போன் செயலிகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் கென்யாவில் உயிரிழந்துள்ளது.
- பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்
- பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்
- ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான தைவானின் தாய் சூ யிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
- சீனாவின் புதிய பாதுகாப்பு துறை அமைச்சராக வெய் ஃபெங்கே(wei fenghe) நியமிக்கப்பட்டுள்ளார்
- வாடிகனை அடுத்த மிக சிறிய நாடு மொனாகோ பிரிட்டனை சேர்ந்த ஸ்டிபன் ஜவ்ஸன் 7கண்டங்களையும் மோட்டார் சைக்கிள் மூலம் கடந்து சாதனை படைத்துள்ளார்
- கர்நாடகாவில் லிங்காயத்து சமூகத்திர்க்கு தனி மத பிரிவு அங்கீகாரம் வழங்கியது
- பெட்ரோலின் விலை குறைவான நாடுகளின் பட்டியலில் வெனிசுலே முதலிடத்தில் உள்ளது
- பினாமி சிமெண்ட் நிறுவனத்தை ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது
- சூரியனின் உள்சக்தியை நீண்ட காலத்துக்கு அளவீடு செய்யும் வகையில் நாசா டோட்டல் மற்றும் ஸ்பெக்டரல் சோலர் இராடியன்ஸ் சென்சார்(Total and Spectrral solar irradiance sensor) என்ற கருவியை தயாரித்துள்ளது
- சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் விர்தாவல் காதே(virdhawal khade) தங்கம் வென்றார்.
- டி20 பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் 2வது இடத்தில் உள்ளார்
- மார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் தினம்