------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
16.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.
உலகில் மன அழுத்தம் குறைவானவர்கள் வாழும் நாடுகள் பட்டியல் அறிக்கையை Zipjet என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டது. இதில் Stuttgart(ஜெர்மனி) முதலிடத்தில் உள்ளது.
2. உலகின் வயதான நபர் (2017) Violet Mosse – Brown
(117) (ஜமைக்கா) கின்னஸ் சாதனை படைத்தவர் நேற்று(செப்டம்பர் 15) காலமானார்.
3. ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமை ‘டோக்சுரி’ என்கிற புயல் தாக்கியது.
4. இராணுவ ரீதியிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா) காபூலில்(ஆப்கானிஸ்தான்) நடைபெற்றது. ‘பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்று 3 நாடுகளும் உறுதியளித்தன.
5. 12 ஆண்டுகளாக விண்வெளியில் சனிக் கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினிக் விண்கலம் செப்டம்பர் 15 தனது செயல்பாட்டை இழந்தது.
6. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஜப்பான் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இப்பகுதிகளில் ஜப்பான் உள்பட அயல் நாட்டு முதலீடுகளை அனுமதிக்க முடியாது என்று சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
7. வாஷிங்டனில்(அமெரிக்கா) உலக வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
8. நியூயார்க்கில் 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களை விழுங்கும் திறன் உடைய முதலை இனத்தை அமெரிக்க தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தேசிய செய்திகள்
9. ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண் விரைவில் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
10. செப்டம்பர் 15 டெல்லியில் “டிஜிட்டல் ஹரியானா மாநாடு” நடைபெற்றது.
11. பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளவியல் மதிப்பீடு அளிக்கவும் சிபிஎஸ்இ தன் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அறிவித்துள்ளது.
12. வயதான பெற்றோர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியர்களின் ஊதியம் 10 சதவீதம் பிடிக்கப்படும் என்ற மசோதா அஸ்ஸாம் சட்டப்பேரவையில் நேற்று(செப்டம்பர் 15) நிறைவேற்றப்பட்டது.
13. தொலைதூர இலக்குகளை துல்லியமாகத் தாக்கவல்ல அதிநவீன ‘அஸ்திரா’ ஏவுகணையானது வங்கக் கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
14. நீண்ட விடுமுறையில் வெளியூர் செல்ல விரும்புவோர், வழங்கல் துறை இணையதளத்துக்கு சென்று, தற்காலிகமாக ரேஷன் பொருள்கள் வேண்டாம்’ என்று பதிவு செய்யும் புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. www.tnepds.gov.in எனும் இணையதளத்தில் Give it up கொடுக்க வேண்டும்.
15. செப்டம்பர் 14ம் தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.
16. மொபைல் போன் மற்றும் லேண்ட் லைன் என்ற தரைவழி தொலைபேசி இணைப்பு பயன்பாட்டில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.
17. பெண்கள் தங்களை தாங்களே பாதுகாக்கும் வகையில் பலமாக உதைத்தால் மின்சாரம் பாயும் அளவில் ‘மின் காலனியை’ ஹைதராபாத் மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
18. அஞ்சல் துறையினருக்கான 31வது அகில இந்திய கபடி போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
19. 44வது மாநில ஜுனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி சங்ககிரியில் செப்டம்பர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும்
20. கொரியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கணை பி.வி சிந்து மற்றும் ஹி பிங்ஜியா(சீனா) மோதுகின்றனர்.
21. புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய போட்டியில் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
22. சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சமீர் வர்மா, சாய் பிரணீத் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறி 16 மற்றும் 25வது இடத்தில் உள்ளனர்.
23. இந்திய அணிக்கு எதிரான ஹாக்கி ஆட்டத்தில் டென் போஷ் அணி வெற்றி பெற்றது.
வர்த்தக செய்திகள்
24. சரக்கு மற்றும் சேவை வரியை தவிர்க்கும் நிறுவனங்கள் மீது அடுத்த வாரம் முதல் சோதனை நடத்த வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
25. மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது விற்பனையாளர்களுக்கு சிறுகடன் வழங்க திட்டமிட்டுள்ளது.
26. நாட்டின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 10.29 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் இறக்குமதி 21.02 சதவீதம் உயர்ந்துள்ளது.
27. எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுக்காக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 55000 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
28. நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை முதல் காலாண்டில் ரூ. 92950 கோடியாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.