TNPSC Current Affairs 15th September 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
15.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    ONI எனப்படும் Ouality of Nationality Index அடிப்படையில் உலகில் எந்த நாட்டின் கடவுச்சீட்டு மிகவும் மதிப்பு மிக்கது என்ற பட்டியல் வெளியிட்டப்பட்டது. இதில் ஜெர்மன்(159 நாடுகளில்)முதலிடத்தில் உள்ளது.(தொடர்ந்து ஆறு முறையாக முதலிடம்)
2.    உலகப் பொருளாதார மன்றம் என்னும் அமைப்பு உலகின் 130 நாடுகளில் உள்ள மனித மூலதனத்தை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தியா 103வது இடத்தில் உள்ளது.
3.    சிங்கபூரில் கடவுச்சீட்டை (passport) பயன்படுத்தி சில நிமிடங்களில் Boarding passபெறுவதற்காக ATM போல ஒரு நவீன இயந்திரம் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆங்கிலம் சீனாய் மலாய் போன்ற சில மொழிகளோடு தமிழ் மொழியையும் சேர்த்துள்ளனர்.
4.    உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் விடுமுறை விடப்படும் நாடுகள் பட்டியலை ஆன் லைன் பயண வலைதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
5.    உலகத்திலே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிணறு – திருப்பதியில்(ஆந்திரா) உள்ளது.
6.    பூமியிலிருந்து 418 கி.மீ உயரத்தில் மிதக்கும் சர்வதேச விமான நிலையம் உள்ளது. உயிரியல், உயிரி தொழில்நுட்பம், பூகோள அறிவியல் சம்பந்தமாக ஆய்வு மேற்கொள்ள ரஷ்ய விண்கலம் விண்வெளி சென்றுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
7.    உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் உருவப் படம் கொண்ட 10 பவுண்டு கரன்சி பிரிட்டனில் நேற்று(செப்டம்பர் 14) புழகத்துக்கு வந்தது
8.    இந்தியா – ஜப்பான் இடையே தடையின்றி விமானங்களை இயக்கும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையைழுத்தாகின.
தேசிய செய்திகள்
9.    மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட நாட்டிலுள்ள தூய்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் (3500 கல்வி நிறுவனங்களில்) முதல் 12 இடத்தில் உள்ளது.
10. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ‘தூய்மைப்படுத்துதல் ஒரு சேவை’ என்ற பிரசார இயக்கத்தை குடியரசு தலைவர் தேசிய அளவில் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைக்கிறார்
11. பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளியும், ஆசிரியருமே முழு பொறுப்பு. இந்த நெறிமுறைகளை மீறினாலோ அல்லது தவறினாலோ சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று (சிபிஎஸ்இ) மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
12. இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளின் விற்பனையை தணிக்க செய்து சான்றிதழ் வழங்கும் ஏ.பி.சி(ஆடிட் பிரோ ஆப் சர்குலேஷன்ஸ்) நிறுவனத்தின் புதிய தலைவராக தேவாப்ரத முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.
13. நாட்டில் தமிழ்நாடு ஆந்திரா ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாவட்டங்களிலும் ஜப்பானிய தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என்று இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான 12வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
14. தமிழகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்
15. கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக எஸ்.ஜெயந்தி நிமிக்கப்பட்டுள்ளார்.
16. செப்டம்பர் 15 (இன்று) அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்கள் என 128 பேருக்கு தமிழக அரசு சார்பில் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
விளையாட்டு செய்திகள்
17. சென்னையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் சசிகுமார் முகுந்த், அர்ஜுன் காடே ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
18. ஜெனீரோவில்(பிரேசில்) 17 நாட்கள் நடைபெற்ற 31வது ரியோ டி ஒலிம்பக் போட்டி நிறைவடைந்தது. 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஒலிம்பிக் போட்டி 2020ல் டோக்கியோவில்(ஜப்பான்) நடைபெறவுள்ளது.
19. கொரியா ஓபன் சூப்பர் சீரீஸ் பாட்மிண்டேன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, சமீர் வர்மா ஆகியோர் காலியிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
20. 2017 – 2018ம் ஆண்டிற்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் அக்டோபர் 6ம் தேதி தொடங்குகிறது.
21. சர்வதேச கால்கந்து சம்மேளனம் உலக கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 107 இடத்தில் உள்ளது.
22. 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸில்(பிரான்ஸ்)நடக்கிறது.
23. அஞ்சல் துறையின் 31வது அகில இந்திய கபடி சென்னை நேரு அரங்கில் நடைபெற்று வருகிறது இதில் தமிழக அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
24. டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆப் தொடரில் இந்தியா அணி, கனடா அணியுடன் இன்று (செப்டம்பர் 15) மோதுகின்றனர்.
வர்த்தக செய்திகள்
25. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக எம்.என்.சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
26. எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுனம் (எஸ்பிஐ லைஃப்) செப்டம்பர் 20ம் தேதி முதல் பொதுப் பங்கு வெளியீட்டைத் தொடங்கவுள்ளது.
27. ஏசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள புளு ஸ்டார் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 21 வகையான குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை (வாட்டர் ப்யூரிஃபையர்”) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
28. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 1.55 லட்சம் தபால் அலுவலகங்களிலும் வங்கி சேவைகள் கிடைக்கும் என இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி தலைமை செயல் அதிகாரி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
29. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் நாட்டின் ஜிடிபி 6 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும் என்று எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
30. தி இந்து நிறுவனம் “ஆட்டோ எக்ஸ்போ 2017” கண்காட்சியை செப்டம்பர் 16ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் தொடங்க உள்ளது.
31. தமிழ், தெலுங்கு, கன்னடா, உருது உள்ளிட்ட 7 மொழிகளைக் கொண்டு ஆஃப்லைன்களில் டிரான்ஸ்லேட் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


Previous Post Next Post