தேசிய செய்திகள்
1. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டபிரிவு 370 மற்றும் 35 A வை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.
3. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரரேசங்களாக பிரிக்கப்படுகிறது.இதன்படி ஜம்மு காஷ்மீரை தலைமையாக கொண்ட சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லாடாக்கை தலைமை இடமாக கொண்டு ஒரு யூனியன் பிரரேசமும் உருவாக்கப்படுகின்றன.
4. சிறை கைதிகளுக்கு வாக்குரிமை கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட பிரிவு 62 (5) படி சிறை கைதிகளுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் வாக்குரிமை என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 62ன் கீழ் வழங்கப்பட்ட சட்ட ரீதியான உரிமையாகும்.
5. சீமைக்கருவேல மர ஒழிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் 30 கிராம் எடையுள்ள நீர் செயற்கைகோளை கரூர் மாணவர்கள் உருவாக்கியள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம்” அரசு பள்ளி மாணவர்களுக்கு “விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்” என்ற போட்டியை போட்டியில் இந்த செயற்கைகோள் அறிமுகப்படுத்தப்பட்டது.
வர்த்தக செய்திகள்
6. ஒஎன்ஜிசி நிறுவனத்தின் புதிய இயக்குநராக ராஜேஷ்குமார் ஸ்ரீவஸ்தா பொறுப்பேற்றுக் கொண்டார். ஒஎன்ஜிசி என்பது மகாரத்னா நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
விளையாட்டு செய்திகள்
7. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்பட சக பயிற்சியாளர்களை கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.