நடப்பு நிகழ்வுகள் ஜூலை 31, 2019





உலக செய்திகள் 

1. சர்வதேச மணல் கலைஞரான பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக் அமெரிக்காவில் பாஸ்டனில் நடைபெற்ற 2019 ரெவரே பீச் சர்வதேச மணல் கலை சாம்பியன்ஷிப்பில் மக்கள் தேர்வு பரிசை வென்றார்.

தேசிய செய்திகள் 

2. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஆறிலிருந்து ஒன்பதாக உயர்த்துவதற்கான சட்ட முன்வரைவை தமிழ்நாடு சட்டப்பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

3. உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெற்றது இமயமலை மாநாடு. இமயமலை மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே இதன் நோக்கம்.

4. உலக சுகாதார அமைப்பானது எச்ஐவி மருந்தான டொலுட்டிகிராவிர் (dolutegravir – DTG)என்பதனை அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சிகிச்சைக்கு பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.

விளையாட்டு செய்திகள் 

5. 23வது ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ பிரிவில் மேரி கோம், 60 கிலோ பிரிவில் சிம்ரான்ஜித் கவுர் தலா ஒரு தங்கம் பதக்கங்கள் கைப்பற்றினர்.

6. 2020 மற்றும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயார் நிலையை ஒருங்கிணைத்து மற்றும் உத்திகளை வகுத்துச் செயல்படுத்துவதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post