உலக செய்திகள்
1. இன்போசிஸ் தனது அதிநவீன சைபர் பாதுகாப்பு மையத்தை ருமேனியாவின் புக்கரெஸ்டில் துவக்கியது.
2. எஸ்.யு – 30 ரக போர் விமானங்களில் பொருத்துவதற்காக ரூ.1500 கோடி மதிப்பில் அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ளது
தேசிய செய்திகள்
3. அருணாச்சல பிரதேச முதல்வரான பீமா காண்டு இட்டாநகரில் மாநிலம் தழுவிய மரம் நடும் திட்டமான ‘சுத்தமான-பச்சை அருணாச்சல் பிரச்சாரம் 2019’ தொடங்கினார்.
4. ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாரம்பரிய மருத்துவம் பயின்றோர் நவீன மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்கும் வகையிலும் 2019 தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
5. சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா (போக்ஸோ) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
6. தில்லியில் 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தில்லி முதல்வர் கேஜரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், இது ஆகஸ்ட் – 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
7. ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வை பரப்பியதற்காக DD நியூஸ் (தூர்தர்ஷன்), 24*7 இந்தியா செயற்கைக்கோள் செய்தி சேனல்க்கு “சாம்பியன்ஸ் ஆஃப்; எம்பாத்தி விருது” வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
8. ப்ரித்வி ஷா ஒரு ஊக்கமருந்து விதிமீறல் காரணமாக இந்திய கிரிக்கேட் கட்டுப்பாட்டு வாரியத்தால் 8 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
9. தைவானின் தைபேயில் நடைபெற்ற 2 வது உலக காது கேளாத இளைஞர் பூப்பந்து சாம்பியன்ஷிப் 2019 போட்டியில் தமிழக வீராங்கனையான ஜே ஜெர்லின் அனிகா 4, பதக்கங்களை (1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்) பெற்றுள்ளார்.