நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 28, 2019




உலக செய்திகள் 

1. இந்தோனேசியவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஜாவா கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அதன் தலைநகரை போர்னியோவிற்கு மாற்றவுள்ளது.

2. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ரஷ்யாவின் ஹ்யூமனாய்ட் ரோபோவை தனது சர்வதேச விண்வெளி மையத்தில் இணைத்துள்ளது.

தேசிய செய்திகள் 

3. இந்தியாவிற்கான 11-வது ‘சி-17 குளோப்மாஸ்டர்’ போக்குவரத்து விமானத்தை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைத்தது.

4. கிராம்நெட் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் Wi-Fi வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

5. புது தில்லியில் ஜல் ஜீவன் மிஷன் குறித்த மாநில அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டினை ஜல் சக்திக்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் சேகாவத் தலைமை தாங்கினார்.

6. ‘ஜுடாக்சா’ இதழ் நீரின் மேற்பரப்பில் நடக்க அல்லது ஓடக்கூடிய 7 புதிய பூச்சிகளைப் பற்றி வெளியிட்டுள்ளது. மெசோவெலியா (எம்) அந்தமனா (அந்தமான் தீவுகள்) பிஸ்பினோசா மற்றும் எம். இசியாசி (மேகாலயா) அக்கல்ட்டா மற்றும் எம் டெனுயா (தமிழ்நாடு) ப்ரெவியா மற்றும் எம். டிலாடாட்டா (மேகாலயா மற்றும் தமிழ்நாடு).

7. இந்தியாவின் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தனது “மான் கி பாத்” “Mann ki Baat” நிகழ்ச்சியில் செப்டம்பர் மாதத்தை ‘போஷான் அபியான்’ (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) – ‘POSHAN Abhiyaan’ (National Nutrition Mission) இன் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடுவதாக அறிவித்தார்.

8. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஐ.டி.ஐ நாக்பூரில் உள்ள மாணவர்களுக்கு  ரபேல் போர் விமான பாகங்களை இணைப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

9. டெல்லி பெரோசா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10. பே.டி.எம் நிறுவனத்தின் புதிய தலைவராக கோல்டுமேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அமித் நய்யார் நியமிக்கப்பட்டுள்ளார்.

11. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக இந்திய வீரர்கள் 4 பேருக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் 15 மாதங்கள் பயிற்சி அளிக்கவுள்ளது. ககன்யான் திட்டம் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2022ஆம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்பட உள்ளது.

முக்கிய தினங்கள் 

12. ஆகஸ்ட் 26 - மகளிர் சமத்துவ தினம். பெண்களின் சமத்துவ தினத்திற்கான நிறம் ஊதா.

இரங்கல் 

13. இந்தியாவின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா காலமானார்.



Previous Post Next Post