நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26, 2019





உலக செய்திகள் 

1. மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் (GII) 12 வது பதிப்பை புதுதில்லியில் வெளியிட்டார். 2019 GII இன் கருப்பொருள் “ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குதல் – மருத்துவ கண்டுபிடிப்புகளின் எதிர்காலம்” (“Creating Healthy Lives – The Future of Medical Innovation”) என்பதாகும்.

தேசிய செய்திகள் 

2. பெரு நகரங்களில் மெட்ரோ இரயில் இருப்பதைப் போல, சிறு நகரங்களில் குறைவான பெட்டிகள் கொண்ட இலகுரக ‘மெட்ரோலைட்’ இரயிலை இயக்கலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

3. திரிபுராவில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 1925 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

4. இந்திய ஆயுதப்படைகள் நாட்டின் முதல் உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி போர் பயிற்சியான “இண்டஸ்பேஸ்எக்ஸ்” “IndSpaceEx”.

5. மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் (Prahlad Singh Patel) நாடு முழுவதும் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஒரு சிறப்பு மென்பொருளான ‘ஜடான்’ – ஐ (JATAN)இ அறிமுகப்படுத்தினார்.

6. விண்வெளித் துறையில் பணிபுரியும் பன்னாட்டு துளிர்நிறுவனங்களை ஈர்ப்பதற்கும் விண்வெளி தொடர்பான தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதன்மை மையமாக அதை உருவாக்குவதற்குமாக திருவனந்தபுரத்தில் அதிநவீன விண்வெளி அமைப்புகள் பூங்காவை அமைக்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

7. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) தனது முதல் சூரிய பயணமான ஆதித்யா – ட 1 ஐ 2020 முதல் பாதியில் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

8. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் பிரித்தி படேல் பிரிட்டனின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை செயலாளர் இவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post